மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 7
புதுச்சேரி : புதுச்சேரியில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான வினாடி வினா போட்டி நடந்தது. கோகோ கோலா நிறுவனம் சார்பில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற இந்திய அளவில் 80 நகரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வினாடி வினாடி போட்டிகளை நடத்தி வருகிறது. நேற்று காலை புதுச்சேரி அளவில் நடைபெறும் அரையிறுதி போட்டி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளில் புதுச்சேரியிலுள்ள 44 பள்ளிகளைச் சேர்ந்த 8ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்கால்ட் மூலம் மாணவ, மாணவிகளிடம் பொது அறிவு தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்பட்டது. போட்டி முடிவில் செயின்ட் பேட்ரிக் பள்ளி, கேந்திர வித்யாலயா(1) பள்ளி, ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி, குளூனி மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை மாருதி மேல்நிலைப்பள்ளி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் செயின்ட் பேட்ரிக் பள்ளி முதல் இடத்தையும், கேந்திர வித்யாலயா(1) பள்ளி இரண்டாவது இடத்தையும், ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுச்சேரி கோகோ கோலா நிறுவனத்தின் மேலாளர் அருண்மொழி மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஓவியர் ராஜேந்திரன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 80 அணிகளுக்குள் நடக்கும் போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். விழா மேடையில் லிம்கா புத்தகத்தில் இடம் பெறுவதற்காக கைகளைக் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய மோகன், கைகளைக் கட்டிக்கொண்டு நீச்சல் அடித்த பிரேம்ஆனந்த் ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 hour(s) ago | 7