உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சதுரங்க போட்டியில் புதுச்சேரி வீரர் சாதனை

சதுரங்க போட்டியில் புதுச்சேரி வீரர் சாதனை

புதுச்சேரி: தேசிய செவித்திறன் குறைபாடுடையோருக்கான சதுரங்க போட்டியில் புதுச்சேரி வீரர் மூன்றாமிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தேசிய செவித்திறன் குறைபாடுடையோருக்கான சதுரங்க போட்டி டில்லியில் நடந்தது. இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து செவித்திறன் குறைபாடுடைய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரி செவித்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டு மன்றத்தில் சார்பில், ரோஷன் என்பவர் பங்கேற்று, மூன்றாமிடத்தை பிடித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த வீரர் ரோஷனை, புதுச்சேரி செவித்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டு மன்ற பொதுச்செயலாளர் பாசித், துணை தலைவர் சத்தியபுவனம் மற்றும் நிர்வாகிகள் அவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி