உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பீச் வாலிபால் போட்டி லீக் சுற்றில் புதுச்சேரி வீரர்கள் அபாரம்

தேசிய பீச் வாலிபால் போட்டி லீக் சுற்றில் புதுச்சேரி வீரர்கள் அபாரம்

புதுச்சேரி: டாமன் டையூவில் நடைபெற்று வரும் தேசிய பீச் வாலிபால் லீக் சுற்றில் புதுச்சேரி ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் அபாரமாக முன்னேறி வருகின்றனர்.கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழாடாமன் டையூவில் கடந்த 19ம் தேதி துவங்கியது. போட்டியை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.வரும் 24ம் தேதி வரை நடைபெறும்இவ்விழாவில் பீச் வாலிபால், பென்கா சிலாட் மற்றும் செபக் டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.அதில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடந்த பீச் வாலிபால் லீக் சுற்று போட்டிகளில் ஆடவர் பிரிவில் புதுச்சேரி வீரர்கள் அந்தமான், டாமன் டையூ மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை வீழ்த்தி முன்னேறியுள்ளனர்.அதேபோன்று பெண்கள் பிரிவில் தமிழக அணியிடம் தோல்வியடைந்த புதுச்சேரி வீராங்கனைகள் நேற்று நடந்த தெலுங்கானாவுடனான போட்டியில் அபாரமாக விளையாடி 21-11; 21-15 புள்ளிகளில் நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.நேற்று நடைபெற்றசெபக் டக்ராஆண்கள் பிரிவு போட்டியில் புதுச்சேரி, தெலுங்கானா அணிகள் மோதின. அதில் புதுச்சேரி அணி 5-15; 16-17 என்ற புள்ளிகள் பெற்று பின்தங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை