உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய மினி கோல்ப் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு

தேசிய மினி கோல்ப் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: தேசிய அளவிலான மினி கோல்ப் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்களை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.சேலம் மாவட்டத்தில் தேசிய அளவிலான 10வது ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் மினி கோல்ப் விளையாட்டுப் போட்டிகள் வரும் 28ம் முதல் இன்று 2ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில், பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த 36 வீரர், வீராங்கனைகள் புறப்பட்டு சென்றனர். அவர்களை, அமைச்சர் நமச்சிவாயம், வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இதில், பாண்டிச்சேரி மினி கோல்ப் அசோசியேஷன் தலைவர் ஜான் அம்ரோஸ், செயலாளர் எழில்ராஜன் உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி