உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வீரர்கள் குஜராத் பயணம்

புதுச்சேரி வீரர்கள் குஜராத் பயணம்

புதுச்சேரி: குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான தேக்வாண்டோ சாம்பியன்ஷிப்  போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் குஜராத் புறப்பட்டனர். தேசிய அளவிலான 2வது இந்தியா தேக்வாண்டோ மெய்நிகர் சாம்பியன்ஷிப்- –2026ம் ஆண்டிற்கான போட்டி  வரும் 26, 27 தேதிகளில் குஜராத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தேர்வான புதுச்சேரி வீரர்கள் ஹரி பாலாஜி, ஆதவன், சுரேகா, அமர்நாத், ரியா, கவுதமன் ஆகியோரை அரசு கொறடா  ஆறுமுகம் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், புதுச்சேரி ஒலிம்பியன் தேக்வாண்டோ சங்க தலைமை நிர்வாக அதிகாரி சிட்டிபாபு, சங்க பொதுச்செயலாளர் தினேஷ்குமார், துணைத் தலைவர் சங்கர் ராஜ், சர்வதேச தேக்வாண்டோ நடுவர் செல்வமுத்து கிளை செயலாளர்கள் ஆனந்த், பிரபாகரன், ராஜ்மோகன் பாண்டியராஜ், ஹேமசங்கர், திருவருள், சிவா மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !