உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர்களுக்கு தங்கப் பதக்கம்

தேசிய பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரர்களுக்கு தங்கப் பதக்கம்

புதுச்சேரி: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் இரண்டு தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.தேசிய அளவிலான பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நடந்தது. இதில் 16 பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், புதுச்சேரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கக்கான போட்டியில், அதியமான், அகிலன் ஆகியோர் முதலிடம், கிஷாந்த் மற்றும் ரோஷன் ஆகியோர் இரண்டாவது இடம், சுந்தரம், ஆனந்த் ஆகியோர் மூன்றாவது இடம் பிடித்தனர்.21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் விக்னேஸ்வரன், புவனேஸ் ஆகியோர் இரண்டாவது இடம் பிடித்தனர். இப்போட்டியில் புதுச்சேரி வீரர்கள், மொத்தம் இரண்டு தங்கப் பதக்கம்,6 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் பதக்கங்கள் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை