உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கடந்தாண்டு 1,329 விபத்துகளில் 212 பேர் பலி தேசிய சராசரி அளவை தாண்டியது

புதுச்சேரியில் கடந்தாண்டு 1,329 விபத்துகளில் 212 பேர் பலி தேசிய சராசரி அளவை தாண்டியது

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த 1,329 சாலை விபத்துக்களில், 212 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறியதாவது:சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த 1,299 சாலை விபத்துகளில் 232 பேர் இறந்தனர். கடந்த 2024ம் ஆண்டு நடந்த 1,329 விபத்துகளில் 212 பேர் இறந்துள்ளனர். நாடு முழுதும் சராசரியாக ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக தேசிய அளவில் பதிவாகி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சாலை விபத்தில் உயிரிழப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 70 சதவீதம் பைக் விபத்துகளில் ஏற்பட்டவை. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றதால் தலையில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி