மேலும் செய்திகள்
கார் மோதி முதியவர் பலி
22-Sep-2025
புதுச்சேரி: புதுச்சேரியில, ரவுடியை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடுகின்றனர். புதுச்சேரி, குயவர்பாளையத்தை சேர்ந்தவர் விக்கி, 27; ஆட்டோ டிரைவர். இவர், பா.ஜ., நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் தலைவராக இருந்தார். ரவுடியான இவர் மீது, கொலை, வழிப்பறி, அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 11.30 மணிக்கு, விக்கி, திருவள்ளுவர் சாலை வழியாக குயவர்பாளையம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நவீனா கார்டன் அருகே பைக், ஆட்டோவில் வந்த கும்பல், அவரை வழிமறித்து சரமரியாக வெட்டி கொலை செய்தது. உருளையான்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று அதே பகுதியில், சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறால் விக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
22-Sep-2025