உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி ரூபா எலக்ட்ரானிக்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா

புதுச்சேரி ரூபா எலக்ட்ரானிக்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா

புதுச்சேரி : புதுச்சேரி ரூபா எலக்ட்ரானிக்ஸ் -ன் புதிய ேஷாரூம், திருவள்ளுவர் சாலையில் திறக்கப்பட்டது. புதுச்சேரியில் ரூபா எலக்ட்ரானிக்ஸ்-ன் புதிய ேஷாரூமை, முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள், லட்சுமிநாராயணன், ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, சம்பத், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். சிறப்பு விருந்தினர்களாக டார்லிங் மேலாண் இயக்குனர் நவராஜா முருகன், பானசோனிக் மண்டல இயக்குனர் ரிச்சர்ட், ேஹயர் மண்டல இயக்குனர் பாஸ்கர், வர்த்தகசபை தலைவர் குணசேகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபார மற்றும் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். ரூபா குருப்ஸ் உரிமையாளர்கள் குமரன், சரவணன், மோகனவேலு, ரவிராஜன், அரவிந்த் ஆகியோர் வரவேற்றனர். உரிமையாளர் கூறியதாவது; ரூபா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஒரே இடத்தில் எலக்ட்ரானிக்ஸ், மொபைல், லேப்டாப் மற்றும் பர்னிச்சர்களுக்கான பிரமாண்ட ேஷாரூம் வாடிக்கையாளர்களுக்காக துவக்கப்பட்டுள்ளது. முன்னனி நிறுவனங்களின் டி.வி. பிர்ட்ஜ், ஏ.சி., வாஷிங்மிஷின் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், மொபைல்கள், லேப்டாப், பர்னிச்சர் வகைகள், அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் 40 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி விலையில், விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு சலுகையாக, பொருட்கள் வாங்கினால், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி, அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 7708272411 மொபைலில் தொடர்பு கொள்ளவும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை