மேலும் செய்திகள்
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
17-Apr-2025
அரியாங்குப்பம்: மாநில அளவில் நடந்த தடகள போட்டியில், குண்டு எறிதல் போட்டியில், புதுச்சேரி மாணவி ஸ்ரீ பிரதிஷா புதிய சாதனை படைத்துள்ளார்.புதுச்சேரியில், மாநில அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 8 வட்டங்களை சேர்ந்த 650 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், 100, 400, 500 மீட்டர் ஒட்டம், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு ஏறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில், அரியாங்குப்பம் சாந்தா அறக்கட்டளை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீபிரதிஷா, 14 வயதுக்குட்பட்ட குண்டு எறிதல் போட்டியில், 9.75 மீட்டர் துாரம் குண்டு எறிந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2023-24ம் ஆண்டில் 9.63 மீட்டர் துாரம் குண்டு எரிந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சாதனை படைத்த மாணவி ஸ்ரீபிரதிஷாவை ராயல் போர்ஸ் அத்லடிக்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி அளித்த முருகன் மற்றும் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
17-Apr-2025