உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: டில்லியில் நடந்த சுதந்திர தின கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். டில்லியில் 19வது சுதந்திர தின தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி செய்க்கோ காய் தலைவர் பழனிவேல் தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள் தருண், லோகேஸ்வரன், விக்னேஸ்வரன், தீபன்ராஜ் ஆகியோர் தங்கப் பதக்கமும், கவுதம், ஷாலிகா, கவிநிலா ஆகியோர் வெள்ளி பதக்கம், சுஜித்ராம், சவிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்று சாதனை படைத்து புதுச்சேரி திரும்பிய மாணவர்களை செய்க்கோ காய் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அரவிந்தன், அமைப்பு சேர்மன் வினாயக மூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி