உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி

சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி

புதுச்சேரி: அகமதாபாத்தில் நடந்த சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் அருணாச்சல பிரதேச அணியை விழ்த்தி, புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 23 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 4 நாள் கர்னல் சி.கே. நாயுடு கோப்பைக்கான போட்டிகள் நடந்து வருகிறது.இதில் புதுச்சேரி- அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 27 ம் தேதி அகமதாபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி அணி அபாரமாக விளையாடி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழந்து 556 ரன்கள் எடுத்து டிக்ேளர் செய்தது. தொடர்ந்து, ஆடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் எடுத்து, பாலோ ஆன் செய்து, 2வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 353 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரி அணி பேட்ஸ்மேன் நெயம் காங்கேயன் 222 ரன்களும், ஜஸ்வந்த் �ராம் 236 ரன்களும் அடித்தனர். ஒரே ஆட்டத்தில் இரண்டு வீரர்கள் இரட்டை சதம் அடித்து சிறப்பம்சமாகும். மேலும், புதுச்சேரி அணி பவுலிங்கில் முதல் இன்னிங்சில் கரன் கண்ணன் 3 ஓவர்களில் 4 விக்கெட்டும், சாய் சரண் 6 ஒவர்களில் 3 விக்கெட்டும் எடுத்தனர்.தொடர்ந்து 2 வது இன்னிங்சில் ராகுல், கரன் கண்ணன், அர்ஷில் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். சிறப்பாக ஆடிய புதுச்சேரி அணிக்கு சி.ஏ.பி., நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி