புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஈக்னாரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுச்சேரி; புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்துார் ஈக்னாரோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டன.ஒப்பந்தத்தில் ஈக்னாரோ நிறுவனத்தின் இயக்குநர்கவுசிக், பல்கலை உள்கட்டமைப்பு தர உறுதி மையத்தின் டீன் நித்தியானந்தன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சிக்கு, பல்கலை துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் செல்வராஜூ, கல்வி மற்றும் கற்றலில் புதுமைத்துறை இயக்குநர் விவேகானந்தன், பல்கலை முன்னாள் மாணவர்கள் தொடர்பு டீன் சாந்தி பாஸ்கரன், தேர்வு கட்டுப்பாடு இயக்குனர் ராஜகோபன், ஆராய்ச்சி புலன் இயக்குனர் ரமேஷ்பாபு, காப்புரிமை புலன் தலைவர் மகாதேவன், பதிவாளர்(பொ) சுந்தரமூர்த்தி, கணினி அறிவியல் துறைத் தலைவர் இளவரசன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தின் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.கடந்த 2022 முதல், இரு நிறுவனங்களும் கணினி பார்வை திறன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் ரோபோட் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஈக்னாரோ நிறுவனம் இளங்கலை மாணவர்களுக்கு ஆறு வாரங்கள் கொண்ட பயிற்சி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதுமைகள் மற்றும் அதன் துணைத் துறைகளில் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தும் முயற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஒப்பந்தத்தின்படி ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் ஏ.ஐ., தொழில்நுட்ப நிரல்களை செயல்படுத்தும் திறன்மிக்க இரண்டு கணிப்பொறி சாதனங்களை ஈக்னோரா நிறுவனம் பல்கலைக்கு வழங்கும் சரத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.