உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் படிப்பு அறிமுகம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் படிப்பு அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் - என்ற புதிய பட்டப்படிப்பு பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கையை சென்டாக் வாயிலாக நடத்துவதற்காக, பல்கலைக்கழக நிர்வாகம் மொத்தம் 30 இடங்களை ஒப்படைத்தது. இது தொடர்பான அரசு ஆணையை உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் இணைச் செயலாளர்  மாலதி வெளியிட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பிராந்திய மாணவர்களுக்கும் சரிசமமான வாய்ப்பளிக்கும் வகையில் இந்த 30 இடங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக புதுச்சேரி பிராந்தியத்திற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் காரைக்கால் பிராந்தியத்திற்கு 5 இடங்களும், மாகே  மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்குத் தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பு இட ஒதுக்கீடு: அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி, மொத்தமுள்ள 30 இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமுதாயப் பிரிவு வாரியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 இடங்களும், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 5 இடங்களும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4 இடங்களும், இ.பி.சி., 1 இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி பிராந்தியத்திற்குரிய 23 இடங்களுக்குள் சிறப்பு பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய பிரிவுகளுக்கு தலா 1 இடம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி