உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி டென்னிக்காய்ட் வீரர்கள் ஜம்மு காஷ்மீருக்கு பயணம்

புதுச்சேரி டென்னிக்காய்ட் வீரர்கள் ஜம்மு காஷ்மீருக்கு பயணம்

பாகூர் : புதுச்சேரி டென்னிக்காய்ட் வீரர்கள், 36வது தேசிய சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன், ஜம்மு காஷ்மீர் மாநில டென்னிக்காய்ட் சங்கம் சார்பில், 36வது தேசிய அளவிலான சப் ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 30ம் தேதி துவங்கி அக்டோர் 4ம் தேதி வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் காந்தி நகரில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி மாநிலம் சார்பாக சிறுவர் அணியில் நிதிஷ், ஸ்ரீநாத், கோகுல், அருளானந்தம் சஷ்வின், ராகவ் ஆகியோரும், சிறுமியர் பிரிவில், காவியா, பவிஷிகா, திவ்யஸ்ரீ, சுவாதி ரிதுபர்ணா, நிரோஷா ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களுடன், பயிற்சியாளராக கரிகாலன், கமலி, மேலாளராக பிரகாஷ், செல்வக்குமார், அகில இந்திய நடுவராக பச்சையப்பன், சங்க செயலாளர் தினேஷ்குமார், ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புறப்பட்ட வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது. இதில், புதுச்சேரி மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு, சங்க உறுப்பினர் கரிகாலன், அகில இந்திய நடுவர் அருள்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு, வீரர்களை வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ