உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மேற்கு, வடக்கு, காரைக்கால் அணிகள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி

புதுச்சேரி மேற்கு, வடக்கு, காரைக்கால் அணிகள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி

புதுச்சேரி: 40 வயது மேற்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி மேற்கு, வடக்கு, காரைக்கால் அணி வெற்றி பெற்றன.கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 40 வயதிற்கு மேற்பட்டோர்க்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி சி.ஏ.பி., மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று காலை நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு அணி, ஏனம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. ஏனம் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 70 ரன்கள் மட்டும் எடுத்து. புதுச்சேரி மேற்கு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கு அணியின் ராஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.மதியம் 12:00 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி வடக்கு அணி, தெற்கு அணி மோதின. வடக்கு அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. தெற்கு அணி 10 ஓவரில் 7 விக்கெட் இழந்து 114 ரன்கள் எடுத்தது. வடக்கு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வடக்கு அணி சசிகுமார் ஆட்டநாயகன் விருது வென்றார். அடுத்து நடந்த போட்டியில் மாகே அணி, காரைக்கால் அணி மோதின. காரைக்கால் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்தது . மாகே அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 73 ரன்கள் எடுத்தது . காரைக்கால் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் அணி பன்னீர்செல்வம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி