உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐயப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பங்கேற்பு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடந்த 17ம் தேதி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று (நவ.,21) இரவு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட ஐயப்பன் சுவாமிக்கு மகா தீபாரானை நடந்தது. திரளான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி