மேலும் செய்திகள்
செஞ்சேரிபுத்தூரில் நாளை மருத்துவ முகாம்
20-Sep-2024
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேதா, ேஹாமியோபதி, பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகிறது. பாகூர் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள சேலியமேடு, குடியிருப்புபாளையம், ஆதிங்கப்பட்டு, குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இங்கு, இயங்கி வரும் கண் மருத்துவம், ஆயுர்வேதா பிரிவு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. அதாவது திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினத்தில் மட்டுமே அந்த மருத்துவரை சந்திந்து சிகிச்சை பெற முடியும். மற்ற நாட்களில், அந்த இரண்டு பிரிவு மருத்துவர்கள், வேறு மருத்துவனைக்கு சென்று விடுகின்றனர். இதனால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அதேபோல், பாகூரில் சுகாதார ஆய்வாளர் பணியிடமும் காலியாக இருப்பதால், கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும், நிலைமை சமாளிக்கும் வகையில், முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம் பகுதிகளை கவனித்து வரும் சுகாதார ஆய்வாளரிடம், பாகூர் பகுதி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில், சுகாதார ஆய்வாளரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், வாரத்தில் ஓரீரு நாட்களே பாகூருக்கு வந்து செல்லும் அவரால், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவது என்பது பெரும் சவாலான விஷயம்.தற்போது, மழைக காலம் துவங்கியுள்ள நிலையில், கொசு உற்பத்தி அதிகரிப்பது மட்டுமின்றி, சீதோஷ்ண மாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் பரவக்கூடும். எனவே, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுகாதார ஆய்வாளரை நியமித்திடவும், கண் மற்றும் ஆயுர்வேதா மருத்துவ பிரிவுகள் தினசரி இயங்கிட, சுகாதார துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Sep-2024