உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேபிஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரேபிஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி:சேவா பகவாடா மாணவர்களுக்கான ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏம்பலம் அரசு மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கால்நடைத் துறை இணை இயக்குநர் குமாரவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கால்நடை மற்றும் வேளாண் துறை செயலர் யாசின் சவுத்ரி, 'மாணவர்கள் கல்வியோடு பொது அறிவையும் வளர்த்துக் கொண்டு, உயர் அதிகாரியாக அமர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்' என பேசினார். கால்நடைத்துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர் கால்நடைத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கால்நடை துறையின் வளர்ச்சி குறித்து பேசினார். இணை இயக்குநர் ராஜூ ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் அதன் தடுப்பூசிகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சிவசங்கரி, தாமரை நாய் கடித்து விட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து விளக்கினார். தொடர்ந்து, ரேபிஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டை துறையின் செயலர் யாசின் சவுத்ரி வெளியிட, பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்வமுத்து பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ