மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு
24-Sep-2026
பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில் ஆபாசமாக பேசிய, ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், சாலமேடு முகிலன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீசார் ரோந்து சென்றபோது, மணமேடு ஏரிக்கரை பகுதியில் ரகளை செய்த கடலுார் மாவட்டம், சிறுவாத்துார் சந்துரு, 26, என்பவரை கைது செய்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட குறிஞ்சிப்பாடி அருண்குமார், 27; முள்ளோடையில் ரகளை செய்த மஞ்சக்குப்பம் வினோத், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
24-Sep-2026