உள்ளூர் செய்திகள்

ராகுல் பிறந்த நாள்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா திருக்கனுாரில் நடந்தது.மாநில காங்., பொதுச் செயலாளர் முத்துரங்கம் முன்னிலை வகித்தார். மாநில காங்., செயலாளார் ரகுபதி ஏற்பாட்டில் திருக்கனுார் கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.வியாபாரிகள் சங்கத் தலைவர் துரைராஜன், காங்., நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், ஆண்டவர், புருஷோத்தமன், ஆறுமுகம், கணேசன், ஆதாம், இளைஞர் காங்., நிர்வாகிகள் பாரத், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை