மேலும் செய்திகள்
குருபூஜை விழா
28-Jan-2025
நெட்டப்பாக்கம்: நத்தமேடு ராஜகோபால கிருஷ்ணன் கோவில் கும்பாபி ேஷகம் விழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம்-நத்தமேடு கிராமத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ராஜகோபால கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 31ம் தேதி ததுக்த ஹோமங்களுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு புண்யாஹவசனம், அக்தி ஆராதனம், கும்ப ஆராதனம், ததுக்த ஹோமங்கள், அஷ்டபந்த பிரதிஷ்டை, மகாசாந்தி ஹோமம், பூர்ணாஹூதி சாற்று முறை நடந்தது. மாலை 4.00 மணிக்கு பூர்ணாஹூதி சாற்று முறை நடந்தது. நேற்று காலை 7.30 புண்யாஹவசனம், கோபூஜை , ஹோமங்கள் நடந்தது. காலை 9.00 மணிக்கு மகாபூர்ணாஷீதி, 9.30 மணிக்கு யாத்ரா தானம், 9.45 மணிக்கு கும்பம் புறப்பாடு, 10.15 மணிக்கு விமான சம்ப்ரோக்ஷணம், 10.30 மணிக்கு மூலவர் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன், லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம், இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் சிவக்கொழுந்து, தாண்டவராயன் ஆகியோர் செய்திருந்தனர்.
28-Jan-2025