உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் பஸ் நிலையம் பெயரை மாற்றக் கூடாது; இளைஞர் காங்.,

ராஜிவ் பஸ் நிலையம் பெயரை மாற்றக் கூடாது; இளைஞர் காங்.,

புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பெயரை மாற்றக் கூடாது என, இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது.மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் அறிக்கை:புதுச்சேரி நகரில் உள்ள ராஜிவ் பஸ் நிலையம் பெயரை மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது. இளைஞர்களுக்குப் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி. இந்த பெயர் மாற்றம், புதுச்சேரி மக்களின் உணர்வுகள், விருப்பங்களை மதிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு.ராஜிவ் காந்தி நாட்டின் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து மேம்பாட்டில் தனிச்சிறப்புடன் பங்களித்து வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டவர். அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன் ஆகியோர் காங்., கட்சியின் ஆதரவின்றி இன்றைய அரசியலில் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டார்கள். முதல்வர் ரங்கசாமி, மக்கள் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு ராஜிவ் காந்தி பஸ் நிலையம் என்ற பெயரை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். இல்லையெனில், மக்களைத் திரட்டி, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !