மேலும் செய்திகள்
நந்தா பொறியியல் கல்லுாரியில்வேலை வாய்ப்பு தினம்
04-May-2025
புதுச்சேரி: தமிழக ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பிரசார் பரிஷத் -2025 அரையாண்டு கூட்டம், புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடந்தது.திருபுவனை ஸ்ரீராமகிருஷ்ண சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளை செயலர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்திற்கு டில்லி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சர்வலோகானந்தாஜி மகராஜ் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சத்ய ஞானானந்தாஜி மகாராஜ், செங்கல்பட்டு ராமகிருஷ்ண மிஷன் செயலர் சுவாமி வேதபிரியாநந்தா மகாராஜ், புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி நித்தியானந்தா மகாராஜ், பாவ பிரசாத், கன்வீனர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தனர்.திருபுவனை ராமகிருஷ்ணா சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் சீனிவாசன் வரவேற்றார்.கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 38 பாவ பிரசார பரிஷத்தின் தலைவர்கள் மற்றும் செயலர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம், டில்லி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சர்வலோகானந்தாஜி மகராஜிடம் ஆசிபெற்றார். உறப்பினர்கள், சங்கங்கள் பதிவு செய்வதுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வரவேற்பு மற்றும் பரிஷத் கொடியேற்று விழா நடந்தது. பின் நிர்வாகிகள் திருமூலவர்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். சுவாமி சத்யஞானானந்த மகராஜ் நோக்கவுரையாற்றினார்.தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு கூட்டத்தின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதியம், புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.பகல் 2;20 மணிக்கு அன்னையின் அன்பு மொழிகள் வாசிக்கப்பட்டது. தமிழக பரிஷத் துணை தலைவர் சுவாமி வேதப்பிரியானந்தர் உரையாற்றினார். மாலை 3;10 மணிக்கு அடுத்த ஆண்டு முழு ஆண்டுக் கூட்டம் நடைபெறும் இடம் முடிவு செய்யப்பட்டு, வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.டில்லி ராமகிருஷ்ண மட தலைவர் சுவாமி சர்வலோகானந்தாஜி மகராஜ் தலைமை உரையாற்றினார். சென்னை பரிஷத் தலைவர் சுவாமி சத்யஞானாந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். இணை கன்வீனர் ஓசூர் ராஜகோபால் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை திருபுவனைஸ்ரீராமகிருஷ்ண சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
04-May-2025