மேலும் செய்திகள்
வள்ளலார் பிறந்த நாள் இலவச மருத்துவ முகாம்
28-Sep-2024
புதுச்சேரி : புதுச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், வள்ளலாரின் 202வது பிறந்தநாள் மற்றும் ராமலிங்க சுவாமி கோவில் மடம் 76வது ஆண்டு துவக்க விழா கடந்த 29ம் தேதி துவங்கியது.இதையொட்டி, நேற்று காலை திருஅகவல் உணர்ந்தோதுதல், திருவருட்பா இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நடந்த திருவருட்பா கருத்தரங்கில், முதலியார்பேட்டை வள்ள லார் மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.வேல்முருகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் குழந்தை வேலனார் துவக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் சங்கீதா 'வள்ளுவர் வழியில் வள்ளலார்', சங்க பொதுச் செயலாளர் கோதண்டபாணி, தலைவர் கணேசன் ஆகியோர் 'சத்திய தருமச்சாலை', நெய்தல்நாடன் 'ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்' என்ற தலைப்புகளில் பேசினர்.
28-Sep-2024