ரஞ்சி கோப்பை கிரிக்கெட் புதுச்சேரி அணி முன்னிலை
புதுச்சேரி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி முன்னிலையில் உள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் நடத்தும், ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் விளையாட்டு திடலில் நடந்து வரும் போட்டியில் புதுச்சேரி அணி, உத்திராகண்ட் அணி விளையாடி வருகின்றன.முதல் இன்னிங்ஸில் புதுச்சேரி அணி 427 ரன்கள் குவித்தது. புதுச்சேரி அணியில் மோஹித் காலே அபாரமாக விளையாடி 202 ரன்கள் எடுத்தார்.உத்திராகண்ட் அணி முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி 154 ரன்கள் முன்னிலை பெற்று, இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. புதுச்சேரி அணியின் சாகர் உதேஷி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட் எடுத்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், புதுச்சேரி அணி 2 விக்கெட் இழந்து 41 ரன்களுடன் 195 ரன்கள் முன்னிலையில் உள்ளது.