உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்

ரேஷன் - ஆதார் கார்டு இணைக்கும் முகாம்

புதுச்சேரி: சின்மய மிஷன் சார்பில், ரேஷன் அட்டையுடன், ஆதாரை இணைப்பதற்கான முகாம், லாஸ்பேட்டையில், நாளை மறுநாள் ( 20ம் தேதி) நடக்கிறது. ரேஷன் அட்டையுடன், ஆதாரை இணைக்கும் முகாம், லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, சின்மய சூரியன் கோவிலில், நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. கிருஷ்ணா நகர் பொதுமக்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்களை எடுத்து வந்து, இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, சின்மய மிஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை