உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன்கார்டு கே.ஒய்.சி., பதிவு முகாம்  ரவிக்குமார் எம். எல். ஏ., துவக்கிவைப்பு

ரேஷன்கார்டு கே.ஒய்.சி., பதிவு முகாம்  ரவிக்குமார் எம். எல். ஏ., துவக்கிவைப்பு

வில்லியனுார்:  மத்திய அரசின் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரியில்  உள்ள அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளும் கட்டாயம் இ-கேஒய்சி செயல் மறையை பூர்த்தி செய்ய வேண்டும் என புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவுறுத்தி உள்ளது.  அதன்படி அனைத்து தொகுதிகளிலும் 28ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் இ-கேஒய்சி பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   வில்லியனுார் தொகுதியில் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை  ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  நேற்று துவக்கிவைத்து பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.    முகாமில் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் பொது சேவை மைய ஊழியர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு இ-கேஒய்சி பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !