உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இன்றும், நாளையும் ரேஷன் கடைகள் செயல்படும்

 இன்றும், நாளையும் ரேஷன் கடைகள் செயல்படும்

புதுச்சேரி: பொங்கல் தொகுப்பு வழங்கும் பொருட்டு இன்றும், நாளையும் ரேஷன் கடைகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷன் கடை பிரிவு கூட்டுறவு துறை மேலாண் இயக்குனர் வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு சார்பில், ரேஷன் கார்டுகளுக்கு ரூ.750 மதிப்புள்ள 4 கிலோ அரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசி பருப்பு, நெய் 300 கிராம், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு இன்று 15ம் தேதியும், நாளை 16ம் தேதியும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் இயங்கும். இதுவரை பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் தொகுப்பை வாங்கி கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ