கால்நடைகளுக்கு ரிப்ளக்டர்
புதுச்சேரி: கால்நடைகளால் விபத்துக்களை தடுக்க, புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கு ரிப்ளக்டர் அணிவிக்கப்பட்டது.புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் கும்பல் கும்பலாக சுற்றி திரிகின்றன.இதனால் இரவில் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில், புதுச்சேரி பிராணிகள் நலன், பாதுகாப்பு இயக்கம், மத்திய விலங்குகள் நல வாரியம் மூலம் ரிப்ளக்டர் பொருந்தும் நிகழ்ச்சி நடந்தது.சாலையில் திரிந்த கால்நடைகளுக்கு மத்திய விலங்குகள் அதிகாரி செல்வமுத்து தலைமையில் கழுத்தில் ரிப்ளடக்டர் அணிவிக்கப்பட்டது. மேலும், சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தலைவர் முரளி, நம்மாழ்வார் நாட்டு இன மாடுகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் உதயசங்கர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கால்நடைகளுக்கு ரிப்ளக்டர் பொருத்தினர்.கால்நடைகளை சாலையில் திரிய விட வேண்டாம் என்று உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.