உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்டல அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்

மண்டல அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மண்டல அறிவியல் கண்காட்சி இன்று ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்குகிறது.துவக்க விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்குகிறார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மண்டல அளவிலான கண்காட்சி இன்று (2ம் தேதி) துவங்கி 4ம் தேதி வரை நடக்கிறது. இதனை காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாணவர்கள், ஆசிரியர்கள், மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். ஏற்பாடுகளை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ராஜகோபால் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை