உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் துாய்மை பணி

ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் துாய்மை பணி

புதுச்சேரி, : தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கிடக்கும் மது பாட்டில்கள், குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், இரவு நேரங்களில், மது குடிப்பவர்கள், காலி பாட்டில்கள், பிளாஸ்டி கவர்கள், வாட்டர் பாட்டில்கள் எனகுப்பைகளை அங்கே வீசி விட்டு செல்கின்றனர். போலீசார் ரோந்து பணியில் சென்றும் மது குடிப்பவர்களை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர்.மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கண்ணாடி ஓடுகள் காலில் குத்தி அவதியக்குள்ளாகி வருகின்றனர்.அங்கு கிடக்கும் பாட்டில்கள் குப்பைகளை, ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ஜோசப் ஆல்பர்ட் முன்னிலையில், ஊழியர்கள் அகற்றி, அந்த பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.மேலும், வளாகத்தில், இரவு நேரங்களில் மது குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ