உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் ஏ.எஸ்.ஐ.,மகன் பலி உறவினர்கள் சாலை மறியல் 

விபத்தில் ஏ.எஸ்.ஐ.,மகன் பலி உறவினர்கள் சாலை மறியல் 

புதுச்சேரி : மூலக்குளத்தில் சாலை விபத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் இறந்த நிலையில், ஆம்புலன்ஸ் வழங்காத தனியார் மருத்துவமனையை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, பிச்சவீரன்பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்; மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் உதவி சப் இன்ஸ்பெக்டர். இவரது மகன் தமிழ்நிதி, 17; கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லுாரியில் பயோடெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை 7:45 மணியளவில் தமிழ்நிதி, தனது தம்பி தேவதர்ஷனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்றார். மூலக்குளம்,பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பஸ்சிற்கு வழி விடுவதற்காக தமிழ்நிதி பைக்கை இடது புறம் திருப்பினார்.அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டியின் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியதில், தமிழ்நிதி, அவரது தம்பி தேவதர்ஷன் படுகாயம் அடைந்தனர்.அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு டாக்டர் பரிசோதித்து தமிழ்நிதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதர்ஷனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கல்லுாரி மாணவர் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், விபத்திற்கு காரணமான சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டியை அடித்து உடைத்தனர்.விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வழங்காத அங்குள்ள தனியார் மருத்துவமனையை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை