உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியாளர் தேவதாசு எழுதிய 10 நுால்கள் வெளியீட்டு விழா

பொறியாளர் தேவதாசு எழுதிய 10 நுால்கள் வெளியீட்டு விழா

புதுச்சேரி: பொறியாளர் தேவதாசு பணி நிறைவு மற்றும் அவர் எழுதிய நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று நடந்த விழாவில் முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் பக்கிரிசாமி வரவேற்றார். சுகுமாரன், சரசு ஞானசேகரன், விக்டோரியா ராஜ்குமார், கலாவதி பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைமைப் பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், அனைத்துலக கட்டடக்கலை பாதுகாப்பியல் வல்லுநர் தெய்வநாயகம், 'தமிழர் கட்டடக்கலை மேம்பாட்டு பணிகள்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் வழக்கறிஞர் ராமலிங்கம், 'நற்றமிழர் போற்றுதும், நட்பு போற்றுதும்' என்ற தலைப்பிலும் பேசினர். பேராசிரியர் இளங்கோ வாழ்த்தி பேசினார். மயிலம் 20ம் பட்டம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அந்தோணிசாமி ஆகியோர் பொறியாளர் தேவதாசு எழுதிய காவடிச் சிந்து, அன்னை தெரெசா பிள்ளைத் தமிழ், தொலைவில் ஒரு வீடு, துாரத்தில் வீடு, தேவதாசு புழகந்தாதி, துள்ளித் துள்ளி, மறைந்த தமிழறிஞர்களும், மறையாத நினைவுகளும், கொழுக்கட்டை, கைத்தடி, கொஞ் சம் விருந்து, கொஞ்சம் மருந்து ஆகிய 10 நுால் களை வெளியிட்டனர். தொடர்ந்து, தமிழ் பாடத்தில் உயர் மதிப்பெண் பெற்ற 54 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தொகுப்பு நுால் கட்டுரையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. இஜாவுத்தீன் பன்பயீ, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் செல்வநாதன், ராமலிங்கம், சினிமா பாடலாசிரியர் பரிணாமன், பாவலர் பயிற்சி பட்டறை மன்ற நிறுவனர் இலக்கியன், முன்னாள் எஸ்.பி., ரவிக்குமார், பால சீனுவாசன், எலும்பு மருத்துவ வல்லுநர் ராஜவர்மன், சோலையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். பொறியாளர் தேவதாசு ஏற்புரை வழங்கினார். ஜெய்வினோத் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !