உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

கடலுார்: கடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், டாக்டர் பிரவீன் அய்யப்பன், 1,300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.கடலுார் ஊராட்சி ஒன்றியம், கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய இருசாம்பாளையம், சின்ன இருசாம் பாளையம், நல்லப்பரெட்டிபாளையம், புதுக்குப்பம், அங்காளன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், பகுத்தறிவு பாசறை இளங்கோவன், முன்னாள் ஊராட்சி தலைவர் நாராயணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா, வசந்த், மாணவரணி ராம்குமார், நிர்வாகிகள் சதாசிவம், சேகர், வீரப்பன், சபாரத்தினம், செந்தில், சக்திவேல், சுரேஷ், அழகப்பன், கனகராஜ், காளிதாஸ், மணி, விஷ்ணு, துரை, இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி