உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பாகூர்: மணமேடு கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கரையாம்புத்துார் அடுத்த மணமேடு கிராமத்தில் தென்பெண்ணையாறு சாலையில் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளின் அருகே, சாலையை ஆக்கிரமித்து பெட்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் மதுப்பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிப்பதாக பொது மக்கள், கலெக்டர் குலோத்துங்கனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட கலெக்டர் உத்தவிட்டார். அதன்பேரில், நேற்று காலை பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி தலைமையில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் மணமேடு கிராமத்தில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், கடை உரிமையாளர்கள், தாங்களாகவே கடைகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். நாளைக்குள் கடைகளை அகற்றிட வேண்டும் எனக் கூறி விட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை