உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு 

புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு 

புதுச்சேரி : முத்தியால்பேட்டை, சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடந்தது.பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களோடு இணைந்து கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.விழாவிற்கு, வட்டம் -1, பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா முன்னிலை வகித்தார். பள்ளியின் பொறுப்பாசிரியர் மர்சியால் அவிலா பாத்திமா வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், வித்யா, ரத்தின பிரியா, வசந்த பிரியா, ராஜராஜ சோழன், முருகசாமி, நர்மதா, கஸ்துாரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை