உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு

சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகளை ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:பொதுப்பணித்துறை, புதுச்சேரி பிராந்தியத்தில் 456.86 கி.மீ. நீளமுள்ள தார் சாலைகளை பராமரித்து வருகிறது. இதில் 294.03 கி.மீ. நீளமுள்ள சாலைகளை கடந்த மூன்று ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் நிதியிலிருந்தும், பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலமாகவும், வங்கிகள் நிதியுதவியுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பராமரிப்பு செய்யும்படி ஒப்பந்தம் போடப்பட்டு, சேதங்கள் ஏற்பட்ட சாலைகள் அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 71 தார் சாலைப்பணிகள் செய்ய 257.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இதில், 20 பணிகள் ஒராண்டு கால பராமரிப்பும், 30 பணிகள் மூன்று ஆண்டு கால பராமரிப்பும், 21 பணிகள் ஐந்து ஆண்டு பராமரிப்பும் செய்யப்பட வேண்டும். பராமரிப்பு பணிக்காலத்தில் ஏற்படும் எல்லாவிதமான சாலை சேதங்களையும் பராமரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இப்பணிகளில் பிரதம மந்திரி கிராம சாலை அபிவிருத்தி திட்டத்தில் வரும் பணிகள் தவிர்த்து ஒப்பந்ததாரர்கள் அவர்களுடைய சொந்த செலவில் செய்யப்பட வேண்டும். தவறினால் அத்தகைய சேதங்கள் துறையின் மூலம் சரி செய்யப்பட்டு அதற்குண்டான தொகையை அப்பணியில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டுள்ள காப்பு வைப்புத்தொகையில் பிடித்தம் செய்யப்படும்.மேலும், இது ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் குறிப்பிடப்படும். சென்ற வாரம் சாலை பராமரிப்பு பணிக்காலத்திலுள்ள மறைமலை அடிகள் சாலை. கடலுார் சாலை, புவன்கரை வீதி, வழுதாவூர் சாலை, மதகடிப்பட்டு- பண்டசோழநல்லுார் சாலை, பங்கூர்பேட் சாலை ஆகியவை ஒப்பந்ததாரரின் செலவில் சரிசெய்யப்பட்டன. மீதமுள்ள 6 சாலைகள் விரைவில் சீர் செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை