மேலும் செய்திகள்
கல்லுாரிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2026
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து மீனவ கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில் நடந்தது. மீனவ கூட்டமைப்பு தலைவர் கனகசபை தேர்தல் அறிக்கையை வெளியிட, ஆலோசகர்கள் சந்திரன், பெரியாண்டி ஆகியோர் பெற்று கொண்டனர். தேர்தல் அறிக்கையில், மீனவ மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும். மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட், ஜே.இ.இ., யூ.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வெளிநாடு கல்வி உதவித்திட்டம் செயல்படுத்தப்படும். கடற்கரை மண்டல் பாதுகாப்பு சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்ட 45 திட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் புதுச்சேரி அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பாளர் தீபா நன்றி கூறினார்.
27-Jan-2026