மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் உயர்வு
21-Nov-2024
புதுச்சேரி: மின்கட்டணம் மற்றும் குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரி செலுத்துவதற்கான கால நீடிப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாணவர்கள், பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் வௌியிட்டுள்ள அறிக்கை:புயல், கனமழையால், புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள், வீடு, வர்த்தகம், தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்டவை, அக்டோபர் மாத மின் கட்டணத்தை, வரும் 20ம் தேதிக்குள் கட்ட வேண்டிய நிலை உள்ளது.தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மின் கட்டணங்களை செலுத்த, தமிழக அரசு கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.எனவே, மின் கட்டணம், குடிநீர் வரி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு செலுத்தி வேண்டிய வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை செலுத்து, புதுச்சேரி அரசு கால அவகாசம் வழங்க வேண்டும்.மேலும், புயல், மழையால், பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
21-Nov-2024