உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை

புதுச்சேரி - கடலுார் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை

புதுச்சேரி: ரயில் திட்டங்களை நிறைவேற்ற, புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம், கோரிக்கை வைத்துள்ளது. சங்கத்தின் சார்பில், தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்; புதுச்சேரி - கடலுார் இ.சி.ஆர்., வழியாக பு திய ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆந்திரா மாநிலம், நகரி யில் இருந்து திண்டிவனம் வரை புதிய ரயில் பாதை திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுார் வரை நீட்டிக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, ரயில் இயக்க வேண்டும். மேலும், புதுச்சேரி ரயில் நிலையம் 92 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. வயதான பயணிகளுக்காக, எஸ்கலேட்டர் (மின் நகரும் பாதை) அமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி