உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு சீல்

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு சீல்

காரைக்கால் ' காரைக்காலில் விதிமுறை மீறி இரவு நேரத்தில் இயங்கிய ரெஸ்டோ பாருக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரியில் ரெஸ்டோ பாரில் சென்னை கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் காரைக்காலில் பார்களில் தாசில்தார் செல்லமுத்து தலைமையில், துணை தாசில்தார் அரவிந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இரவு 12:00 மணிக்கு மேல் இயங்கிய ஒரு ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை