உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லறை தினத்தையொட்டி கல்லறை தோட்டங்கள் புனரமைப்பு 

கல்லறை தினத்தையொட்டி கல்லறை தோட்டங்கள் புனரமைப்பு 

புதுச்சேரி: கல்லறை தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள கல்லறை தோட்டங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி உப்பளத்தில் உள்ள கல்லறை தோட்டம் சீரமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.அதில், அங்கிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, புல்தரைகள் அமைக்கும் பணியும், கல்லறைகளுக்கு வெள்ளையடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.இதேபோல், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், வில்லியனுார், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கல்லறை தினத்தை முன்னிட்டு, நவ.2ம் தேதி அனைத்து பங்குகளிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு, இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை