மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
22-Aug-2025
புதுச்சேரி : அங்கன்வாடி ஊழியர்களுக்கான பணக்கொடை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்ததற்காக, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய பணிக்கொடையை உடனடியாக வழங்கங்கோரி அரசு ஊழியர் சம்மேளனம் மூலம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சட்டசபை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தலைவர் மண்ணாங்கட்டி தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரித்தனர். இதில், சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
22-Aug-2025