உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேதமடைந்த மின்மாற்றியால் நிர்ணயபட்டில் விபத்து அபாயம் 

சேதமடைந்த மின்மாற்றியால் நிர்ணயபட்டில் விபத்து அபாயம் 

பாகூர்: பாகூர் அடுத்துள்ள நிர்ணயப்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே ஏரிக்கரை செல்லும் சாலையோரம் உள்ள மின்மாற்றியில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் இரண்டு சிமெண்ட் கம்பங்களும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. சேதமான மின் கம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் அடி முதல் உச்சி வரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. காற்று பலமாக வீசினால் உடைந்து விழும் அபாயம் உள்ளது. சாலையோரம் இருப்பதால் அசம்பாவிதம் நேரிடும் முன்பாக இந்த மின்மாற்றி கண்பத்தை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !