உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெஸ்டோ பார் திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு

ரெஸ்டோ பார் திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு

புதுச்சேரி: ரெஸ்டோ பார் திறப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் சாலை, மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், ரெஸ்டோ பார் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதனை அறிந்த ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததி நகர் பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு, ரெஸ்டோ பார் பணியை தடுத்து நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ., பொதுமக்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரும் சாலை மறியலில் ஈடுபட்டடார். சம்பவ இடத்திற்கு வந்த கலால் அதிகாரிகள், எம்.எல்.ஏ.,விடம், இப்பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்களும் கலைந்து சென்றனர். இச்சாலை மறியலால் அப்பகுதியில் பரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ