உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனைப்பட்டா கோரி பாகூரில் சாலை மறியல்

இலவச மனைப்பட்டா கோரி பாகூரில் சாலை மறியல்

பாகூர்: பாகூர் பேட் பகுதியில், இலவச மனை பட்டா வழங்கிட கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில், மணவவெளி தொகுதி, டி.என். பாளையம், பாகூர் தொகுதி, மணப்பட்டு கிராம பயனாளிகளுக்கு, சில நாட்களுக்கு முன் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. பாகூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு கையப்படுத்தப்பட்ட இடத்தில், மனைபட்டா வழங்க வலியுறுத்தி, நேற்று காலை பாகூர் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் பாகூர் - வில்லியனுார் சாலை, ஏரிக்கரை அம்பேத்தர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகூர் போலீசார் மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, அவர்களிட ம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி, 'கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள். சம்மந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து பொதுமக்கள் மறியல் கைவிட்டு க லைந்து சென்றனர். இதனால், பாகூர் - வில்லியனுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை