மேலும் செய்திகள்
சிறுக்களஞ்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
20-Sep-2025
வில்லியனுார்: வில்லியனுார் பைபாசில் ரெஸ்டோ பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. வில்லியனுார் பைபாஸ் கண்ணகி பள்ளி ரவுண்டான அருகில் புதிதாக ரெஸ்டோ பார் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆரியப்பாளையம், பாரதி நகர் பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பைபாஸ் ரவுண்டானாவில் நேற்று காலை 8:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதியில் ரெஸ்டோ பார் துவங்க அனுமதி வழங்கிய அரசையும், அதிகாரிகளையும் கண்டித்து கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., சுப்ரமணியன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போக்குவரத்து போலீசார், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனையேற்று மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
20-Sep-2025