உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாகூர்: கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிபாதி, எஸ்.பி., மோகன்குமார் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விதிகளின் முக்கிய அம்சங்கள், சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பொறுப்பான பயண நடைமுறைகள் குறித்தும், அது தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், பாதுகாப்பான பயண பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு தலைக் கவசங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ