மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் பெத்திசெட்டிப்பேட்டை அரசு துவக்க பள்ளியில் நடந்தது. இதில், 150 துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி போக்குவரத்து கழகத்தின் கமிஷனர் அம்சா, வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், போக்குவரத்து துறை அதிகாரிகள் திலீப்குமார், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளித் துணை ஆய்வாளர்கள் அனிதா, செல்வி ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளை அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஜாக்லின், கீதா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
14-Jan-2026